இன்று சீனா வானொலி பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஐம்பது
ஆண்டு கால வரலாற்றில் சுமார் 35ஆண்டு கால வரலாற்றில் நானும்
இணைந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக
பாடுபட்ட சீனவானொலி பணியாளர்கள் தங்கள் பணியை மிகச்சிறப்பாக ஆற்றி,
உலகமுழுக்க நேயர்களை சென்றடையச் செய்துள்ளனர். இதனால் பல்லாயிரம்
நேயர்கள் தனிச்சிறப்பான வகையில் சீனவானொலிக்கு கிடைத்திருப்பது
குறிப்பிடதக்கது. அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப சீன வானொலி தனது ஒலிபரப்பை
மிக நேர்த்தியாக மாற்றம் ஏற்படுத்தி இன்று இணைத்தில் மட்டுமின்றி
செல்லிடைபேசியிலும் காண கேட்க முடிகிறது. அதே போல் கடிதங்களை
எழுதிவிட்டு பலமாதம் காத்திருந்த காலம் மாறி, மின்னஞ்சல் வழியாக
கருத்துக்களை அனுப்பி நொடிப்பொழுதில் சீனா சென்றடையும் முன்னேற்றம்
கண்ண்டுள்ளனர். இதனால் கனினியை கற்றுகொண்ட நேயர்கள் நாளுக்கு நாள்
அதிகரிக்க சீன வானொலி ஒருவாய்ப்பாக அமைந்தது என்றால் அதுதான் உண்மை.
அனைவரும் பொன்விழா ஆண்டின் வாழ்த்துக்கள்!