ஆகஸ்ட் 12ஆம் நாள், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் லண்டன் பொல் எனும் முக்கிய விளையாட்டு அரங்கில் அணைக்கப்பட்டது. நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், உலக விளையாட்டுத் துறையில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா முன்கண்டிராத முறையில் 51 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. ஆனால், ஒட்டுமொத்தத் திறனை வெளிப்படுத்தும் தடகளப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம் மட்டும் கிடைத்தது. 4 ஆண்டுகளுக்குப் பின், இவ்விரு போட்டிகளில் சீன வீரர்கள் மொத்தம் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்று, உலகப் பதிவு அல்லது ஒலிம்பிக் பதிவை முறியடித்தனர்.
மேலும், இந்தத் தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்கள் அனைவரும் 1990ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவராவர். அவர்கள் சீன விளையாட்டுத் துறைக்கு முன்னேற்றத்தையும் உலக விளையாட்டுத் துறைக்கு எதிர்காலத்தையும் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் Ryan Lochte நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 400 மீட்டர் கலப்பு நீச்சல் ஆட்டத்தில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சீனா தலைமையிலான, நீச்சல் வல்லரசு அல்லாத நாடுகளின் வீரர்கள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தலைமையிலான உலக நீச்சல் துறையின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர் என்று அவர் கருத்து தெரிவித்தார். சுன் யாங், யே ஷிவென் போன்ற திறமைமிக்க இளைஞர்கள் உலக நீச்சல் போட்டியைத் தீவிரமாக்குவர் என்றும் அவர் கூறினார்.
"மேலும் வேகமாக நீச்சலடிக்கப் பாடுபடுவேன் என்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். போட்டியாளரின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இனிமேல் பல சிறந்த வீரர்களும் தீவிரமான போட்டிகளும் தோன்றுவர்" என்று அவர் கூறினார்.
இதர விளையாட்டுப் பிரதிநிதிக் குழுக்கள் தங்களது பலவீனத்தைத் தவிர்த்து மேம்பாடுகளை வெளிக்கொணர்ந்த போது, மேலை நாடுகள் மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் போட்டிகளில் நல்ல சாதனைகளைப் பெற சீனா முயற்சி செய்து, பதக்கங்களைப் பெற்றுள்ளது. லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வாள்வீச்சு ஆட்டத்தில் சீனா 2 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று, பிரான்சு, ஜெர்மனி ஆகிய வாள்வீச்சு வல்லரசுகளைத் தாண்டி, வாள்வீச்சுப் பதக்க வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. மேலும், கோவ் ஷுவாங், சியூ லிஜியா, ரென் சான்சான் முதலியோர், உலக மக்களை சீன ஆற்றல் பற்றி மீண்டும் அறிந்து கொள்ளச் செய்கின்றனர். உலக விளையாட்டுத் துறையின் அமைப்பு மீண்டும் வரையப்பட வேண்டியிருக்கிறது.
லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு ஆடவர் 20 கிலோமீட்டர் நடைப் போட்டியின் தங்கப் பதக்கத்தை வென்ற வீரர் சென் திங் பேசுகையில், தங்கப் பதக்கத்தைப் பெற்ற வீரர்களின் மூலம் மேலதிக மக்களை பரிச்சயம் இல்லாத போட்டிகள் பற்றி அறிந்து கொள்ளச் செய்து, உலக விளையாட்டுத் துறையின் அமைப்பில் சீரான மாற்றத்தை ஏற்படுத்துவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நோக்கமாகும் என்று கருத்துத் தெரிவித்தார்.