பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் பற்றிய புதிய தரவுகளை பிரிட்டன் அரசு பிப்ரவரி திங்கள் வெளியிட்டது. 2010ம் ஆண்டில் பிரிட்டனில் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவு 59 கோடி டன் கரியமில வாயுவின் வெளியேற்றத்துக்குச் சமமாகும். இந்த அளவு 2009ம் ஆண்டில் இருந்ததை விட 3.1 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் எரியாற்றல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதைத் தெரிவிக்கிறது.
புள்ளிவிபரத் தரவுகளின் படி, 2009ம் ஆண்டில் இருந்ததை விட 2010ம் ஆண்டு பிரிட்டனில் குடியிருப்பு வீடுகளின் பசுக்கூட வாயு வெளியேற்ற அளவு அதிகரிப்பு 15.1 விழுக்காடாகும். அதற்கு அடுத்து, எரியாற்றல் துறையின். அதிகரிப்பு அளவு 2.8 விழுக்காடாக உள்ளது.
கியோடோ ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையொப்பமிட்டுள்ளது. தவிர, அதன் காலநிலை மாற்றம் பற்றிய சட்ட விதிகளின் படி, 2050ம் ஆண்டில் பிரிட்டனின் பசுங்கூட எரிவாயுக்கள் வெளியேற்ற அளவு 1990ம் ஆண்டில் இருந்ததை விட 80 விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அதன் பசுங்கூட எரிவாயு வெளியேற்றம் நிதானமாகக் குறைந்து வருகிறது. ஆகையால், 2010ம் ஆண்டின் அதிகரிப்புப் பிரச்சினை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றி பிரிட்டனின் எரியாற்றல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஏதவோட் டேவிட் விளக்கம் அளித்துள்ளார். 2010ம் ஆண்டில் பிரிட்டனில் மிகவும் குளிரான வானிலை காணப்பட்டது. அதனால் எரியாற்றல் பயன்பாட்டு அளவு அதிகரித்தது. இந்த தற்காலிக நிலைமை பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற குறைவு பற்றிய பிரிட்டனின் நீண்டகால இலக்கைப் பாதிக்காது என்று அவர் கூறினார்.