தற்போது வாகனத்தை ஓட்டும் போது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பலர் இன்னும் செல்லிடப்பேசியின் ஒலி பெருக்கி அல்லது ஒலிப்பான் வசதி மூலம் பிறருடன் தொடர்பு கொள்கின்றனர். வாகனத்தை ஓட்டும் போது ஓட்டுவதுடன் தொடர்பு இல்லாத எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவது போக்குவரத்து விபத்து ஏற்படு அபாயத்தை அதிகரிக்கும் என்று கனடாவில் வெளியிடப்பட்ட ஒரு புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
ஒட்டாவாவில் அமைந்துள்ள போக்குவரத்து விபத்து ஆய்வு நிதியம் 2011ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் 1208 பேர்களிசம் ஒரு கருத்தாய்வை மேற்கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களை ஓட்டும் போது செல்லிடப்பேசியின் பயன்பாட்டு நிலைமை மற்றும் மாற்றத்தை அறிய இந்தக் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அண்மைய ஒரு வாரத்தில் வாகனங்களை ஓட்டிய போது செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தியதாக கருத்தாய்வில் புலனாய்வில் சேர்க்கப்பட்ட 36.1 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர். இவ்வெண்ணிக்கை 2001ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம் கிடைத்த 20.5 விழுக்காட்டை விட விரைந்து அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் செல்லிடப்பேசிகளின் பரவல் அளவு பெரிதும் அதிகரித்திருப்பது அதற்கான காரணமாகும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. தவிர, 20 முதல் 30 விழுக்காட்டு போக்குவரத்து விபத்துக்களுக்கு ஓட்டுனர்களின் கவனம் குறைவே காரணம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
வாகனங்களை ஓட்டும் போது செல்லிடப்பேசியின் பயன்பாட்டு நேரத்தைக் கூடிய அளவில் குறைக்க முயற்சி செய்வதாகப் பல ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.