வாழ்க்கையில் அடிக்கடி பயன்படாத கைக்குப் பயிற்சி அளிப்பது, கோபமடையும் மற்றும் பிறரைத் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. சுயக் கட்டுபாட்டுத் திறனுக்கும், வன்முறை நடவடிக்கைகளுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு உண்டு என்று 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின் முடிவு கூறுகிறது. அதாவது, மக்கள் அடிக்கடி சுயக் கட்டுப்பாட்டுத் திறனை மேம்படுத்தினால், பிறரைத் தாக்கும் செயல்பாடுகளைப் பயன் தரும் முறையில் குறைக்க முடியும். அடிக்கடி வலது கையைப் பயன்படுத்துவோர் சில வேளைகளில் இடது கையைப் பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளனர். இடது கையைப் பயன்படுத்துவோ வலது கையைப் பயன்படுத்தலாம். இத்தகைய பயிற்சி எளிதாகக் கோபமடையவரின் வன்முறை நடவடிக்கைகளைப் பயனுள்ள முறையில் குறைக்கலாம். கருணையான மக்களைப் பொருத்த வரை, இத்தகைய பயிற்சி அவர்களின் உடல் தோற்றத்தை மேம்படுத்துவதுடன் உடல் நலத்துக்கும் நன்மை பயக்கும்.