ஐப்பானில் கடற்கரைக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள துச்சிக்கி மாவட்ட அருங்காட்சிகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் அம்மாவட்டத்தின் தலைநகர் உச்சுனொமியா நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள கினுக்காவா ஆற்றுப் படுகையில் திமிங்கலப் படிமம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இந்த திமிங்கலப் படிமத்துக்குச் சுமார் ஒரு கோடி ஆண்டுகள் வரலாறுடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
துச்சிக்கி மாவட்டத்துக்குக் கிழக்கில் இபாலாகி மாவட்டம் அமைந்துள்ளது. இபாலாகி மாவட்டம் பசிபிக் கடற்கரையில் உள்ளது. கடற்கரைக்கு அப்பாலுள்ள துச்சிக்கி மாவட்டத்தில் முன்பு 1978ம் ஆண்டு திமிங்கலப் படிமம் கண்டறியப்பட்டது. இந்த முறை கண்டறியப்பட்ட திமிங்கலப் படிமத்தின் நீளம் சுமார் 8 மீட்டராகும். இது ஒரு துடுப்புத் திமிங்கலம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
புதிதாகக் கண்டறியப்பட்டத் திமிங்கலப் படிமம் முழுமையாகவும் சிறப்பாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மார்சு திங்கள் முதல் அது துச்சிக்கி மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.