சீன வானொலி நிலையத்தின் முதன்மை அறிவிப்பாளரும், தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவருமான திருமதி கலையரசி அவர்கள் தொகுத்த சீன-தமிழ் அகராதியின் வெளியீட்டு விழா செப்டம்பர் 19ஆம் நாள் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் அவர்களும், தமிழ் பிரிவின் அனைத்து பணியாளர்களும் அதில் கலந்து கொண்டனர்.
இந்த அகராதியைத் தொகுத்ததற்கான காணரத்தைத் திருமதி கலையரசி அவர்கள் முதலில் விளக்கிக் கூறினார். மேலும், இந்த அகராதியைத் தொகுக்கத் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் வழங்கிய ஆதரவுக்கும் உதவிக்கும் நன்றி தெரிவித்தார். கடைசியில், கலையரசி அவர்கள் கையெழுத்திட்ட அகராதிப் பிரதிகளைத் தமிழ்ப் பிரிவின் பணியாளர்களுக்கு அவரே அன்பளிப்பாக வழங்கினார்.