சீனாவைப் பற்றி சீனாவிலுள்ள வெளிநாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் புரிந்துணர்வை ஆழமாக்கி, சீனாவுக்கும் வெளி நாடுகளுக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றங்களை முன்னேற்றும் வகையில், சீனாவில் வாழும் வெளிநாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பார்வையில் சீனா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட முதல் புகைப்படப் போட்டி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவில் நடைபெறும்.
சீனாவிலுள்ள வெளிநாட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கு வேலை செய்து, கல்வி பயின்று, வாழ்கின்றனர். சீனாவைப் பற்றி அவர்களுக்கு நேரடியான புரிந்துணர்வு உண்டு. அவர்களின் பார்வையில், எழுத்து மற்றும் புகைப்படங்களை மூலம், அவர்கள் கண்ட, உணர்ந்த, புரிந்துணர்ந்த சீனா காட்டப்படுகிறது. சீன மற்றும் உலகப் பண்பாட்டின் பரிமாற்றப் பரவலை இது மேலும் ஆழமாக்கியுள்ளது.
இந்தப் போட்டி 4 திங்கள்கள் நீடிக்கும். சீனாவின் 10க்கும் மேலான உயர் நிலைப் பள்ளிகளில் 21 நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஆயிரக்கணக்கான எழில் மிகு புகைப்படங்களைப் பிடித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் முக்கியமாக 3 வகைகளாக பிரிக்கப்பட்டன. முதலாவது, சீனாவின் இயற்கை காட்சி, இது சீனாவின் அழகான இயற்கைக் காடசியைக் காட்டுகிறது. இரண்டாவது, சீனாவின் நகரங்களும் ஊர்களும், இது சீனாவின் நகரவாசி மற்றும் கிராமவாசிகளின் பழக்கவழக்கங்களையும் தோற்றங்களையும் காட்டுகின்றது. மூன்றாவது, சீன மக்கள், இது வெளிநாட்டு மக்கள் பார்வையிலுள்ள சீன மக்களின் உண்மையான வாழ்வைக் காட்டுகிறது.