விளையாட்டுப் போட்டிகளின் சாதனை இத்துறையிலான அறிவியல் தொழில் நுட்ப ஆய்விலிருந்து பிரிக்கப்பட முடியாது. ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் யேசன் போல்ட் 2009ம் ஆண்டு உலக தடகளச் சாம்பியன் பட்டப் போட்டியில் 9'72 வினாடி என்ற ஆண்களுக்கான உலக 100 மீட்டர் ஓட்டச் சாதனையைப் புரிந்துள்ளது. பிறகு 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 9'69 வினாடியிலும், 2009ம் ஆண்டு பெர்லின் உலக தடகளச் சாம்பியன் பட்டப் போட்டியில் 9'58 வினாடியிலும் அவர் 2 முறை உலகச் சாதனையை முறியடித்துள்ளார். போல்ட்டைப் போல் உயர்ந்த உடல் மெலிந்த ஓட்ட வீரர்கள் குறுகிய தூர ஓட்டப் பந்தத்தில் மேம்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் அண்மையில் கருத்து தெரிவித்தனர்.
பிரிட்டன் வோல்ப் ஹெம்புஃடன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எலன் நெவெலும் அவரது சகப் பணியாளர்களும் அண்மையில் பிரிட்டனின் விளையாட்டு அறிவியல் இதழில் இது பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டனர். கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் தலைசிறந்த குறுகிய தூர ஓட்ட வீரர்களின் தரவுகளை அவர்கள் ஆராய்ந்தனர். இத்துறையில் விளையாட்டு வீரர்களின் உடல் தோற்றம் மேலும் உயரவாகவும் மெலிந்தும் காணப்படும் போக்கை அவர்கள் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக 20ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் இருந்த புகழ்பெற்ற கால் லுயிஸின் உயரம் 1.88 மீட்டர். உடல் எடை 81 கிலோகிராம். போல்டின் உடல் உயரம் 1.96 மீட்டர். உடல் எடை 88 கிலோகிராம்.
உயரமான மெலிந்த ஓட்ட வீரர்கள் ஒப்பீட்டளவில் அதிக தோல் பரப்பைக் கொண்டுள்ளனர். உடல் வெப்பம் வெளியேறுவதற்கு இது துணை புரியும். இந்நிலைமையில், உடல் தசைகள் மிக அதிக அளவில் பணி புரிய முடியும். தவிர, உயர்ந்த மெலிந்த ஓட்ட வீரர்களின் காலாய் எடுத்து வைக்கப்படும் அடிகள் மேலும் பெரியனவாக உள்ளதாக பேராசிரியர் நெவெல் கூறினார்.
ஆய்வு முடிவின் படி RPI என்ற குறியீட்டு வரையறையை ஆய்வாளர்கள் வகுத்தனர். உடல் உயரத்தின் சென்டிமீட்டர் அளவை உடல் எடையின் கிலோகிராம் அளவால் வகுத்து அதன் கனமூலத்தைக் கணக்கிடுவதன் மூலம் கிடைப்பது இந்தக் குறீட்டு எண்ணாகும். இந்தக் குறியீட்டு எண் 44க்கு மேல் இருந்தால், நல்லது. போல்ட்டின் RPI குறியீட்டு எண் 46 ஆகும். எப்படி நண்பர்களே, சொந்தமாக RPI குறியீட்டு எண்ணைக் கணக்கிட்டு எங்களுக்குத் தெரிவிக்கிறீர்களா?