லீ இனம், ஹெய்நான் தீவில் மிக முன்னதாக வாழ்ந்த பழங்குடியின மக்களாவர். அப்பழங்குடியினம் செழுமையாக வளர்ந்து வருகிறது. லீ இன மக்கள் சிறப்பான எழுத்துக்களையும் வழிப்பாட்டுச் சின்னங்களையும் கொள்கின்றனர். அவர்கள் வூச்சிஷென் எனும் மலை கடவுளை தங்களது மூதாதையராகக் கொண்டு வழிபடுகின்றனர்.
பழங்காலத்தில், லீ இனத்தின் பரம்பரியத்தின்படி, பெண்கள் குழந்தை பருவம்முதல் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். இளம் ஆண்கள், பாக்கு மரங்களில் ஏறி பாக்குகளை பறித்து அவர்கள் விரும்புகின்ற பெண்களுக்கு வழங்கி காதலைத் தெரிவிக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு விருப்பமானவரின் காதை இழுத்து செல்லமாய் விளையாடி ஆண்களிடம் காதலைத் தெரிவிக்கின்றனர். அறுவடைப் பருவத்தில், லீ இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி அறுவடையைக் கொண்டாடுகின்றனர்.