கவர்ந்திழுக்கும் ஹெய்நான் பற்றிய பொது அறிவுப் போட்டியின் 8 வினாக்கள்: விடைகளை தேர்வு முறையில் அளியுங்கள். இவ்விடைதாள் நவம்பர் திங்கள் 30ஆம் நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
வினாக்கள் தாளை பதிவிறக்கம் செய்யவும்
1、ஹெய்நான் மாநிலத்தின் மூலவள மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், அம்மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக மாபெரும் முயற்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் என்ன?
A.சர்வதேசச் சுற்றுலாத் தீவு B.பண்பாட்டுத் தொழிற்துறைத் தளம்
2、ஹெய்நான் மாநிலத்தில் வரியில்லாக் கடைகள் அமைந்திருக்கும் இரண்டு நகரங்கள் எவை?
A.ஹெய்கோவ் மற்றும் சான்யா B.ச்சியெங்ஹெய் மற்றும் வான்நிங்
3、《If You Are the OneⅡ》என்ற திரைப்படம், ஹெய்நானின் எந்தக் காட்சித்தலத்தில் தயாரிக்கப்பட்டது?
A.ஹெய்நான் எரிமலை கணவாய்ப் பூங்கா B.யாலொங் குடா வெட்ப மண்ட லவானகக் காட்டுப் பூங்கா
4、யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்காவை வடிவமைத்தபோது, பின்பற்றிய அடிப்படைக் கொள்கை என்ன?
A. உயிரினச் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்காது இருத்தல் B. போதிய தங்குமிட வசதி கட்டியமைப்பது
5、லீ இனப் பண்பாட்டில், வாழ்க்கை பற்றிய மக்களின் எண்ணத்தைக் காட்டும், கண்ணிய நடத்தையின் பொருள் என்ன?
A.பப்பாளிப் பழம் B.பாக்கு
6、ஹெய்நான் மாநிலத்தில், மிக முன்னதாக வாழ்ந்த பழங்குடியினர் யார்?
A.திபெத் இன மக்கள் B.லீ இன மக்கள்
7、லீ இனத்தின் கைவினைப் பொருட்களில், சீன நெசவு வரலாற்றில் வாழும் புதைபடிவமாக அழைக்கப்படும் பொருள் என்ன?
A. லீ இன கைவினைத் துணி B. பட்டு
8、ஹெய்நானில், பண்பாட்டில், மிகவும் பண்பாட்டுத் தனிச்சிறப்பு வாய்ந்த இரண்டு சிறுபான்மைத் தேசிய இனங்கள் யாவை?
A. லீ இனம் மற்றும் மியெள இனம் B. ஹான் இனம் மற்றும் உய்கூர் இனம்