சீனக் கலை இலக்கிய கூட்டமைப்பு, பெய்ஜிங் மக்கள் அரசு, சீன நுண்கலை சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்ற 2012ஆம் ஆண்டுக்கால 5வது பெய்ஜிங் பன்னாட்டு நுண்கலைக் கண்காட்சி 28ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சீன நுண்கலை அரங்கில் துவங்கியது. நான்கு பெரிய சிறப்புக் கண்காட்சிகளில் ஒன்றான இந்தியச் சமகாலக் கலை சிறப்புக் கண்காட்சியில், 11 இந்தியக் கலைஞர்களின் 26 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. "எதிர்காலம் மற்றும் நடைமுறை"இக்கண்காட்சியின் தலைப்பாகத் திகழ்கிறது.