• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்:உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி
  2012-10-08 18:50:43  cri எழுத்தின் அளவு:  A A A   

விண்கலம் மூலம் விண்வெளியில் பயணம் செய்து, சாளரத்தின் மூலம் வெளியே பார்த்தால், தூரத்திலுள்ள கேலிகஸியின் அழகான ஒளியைக் கண்டுகளிக்கலாம். ஆனால், சிறப்பான வசதிகளின் மூலம், அருகிலுள்ள சூழல் அவ்வளவு அமைதியாக இல்லை என்பதைக் கண்டறியலாம். விண்வெளியில் பல்வகை மின்காந்த அலைகள் உள்ளன என்பது உண்மை தான்.

கடந்த பல பத்து ஆண்டுகளில், இந்த மின்காந்த அலைகள் பற்றி மனித குலம் ஆராய்ந்து வருகின்றது. மனித குலம் எங்கிருந்து வந்து, எங்கே சென்று கொண்டிருக்கிறது போன்ற கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்க நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். இவ்வாண்டின் பிப்ரவரி திங்களில் உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கித் திட்டப்பணி மேற்கொள்ளப்படத் துவங்கியது. விண்வெளி ஆய்வுத் துறையில் மனித குலம் எடுத்து வைக்கும் மேலும் முக்கியமான ஒரு காலடி இதுவாகும். Square Kilometer Array என்று இது அழைக்கப்படுகிறது. இந்த வானொலி தொலைநோக்கியின் கடமையை பற்றி ஆஸ்திரேலிய வானொலி வானியல் சர்வதேச ஆய்வு மையத்தைச் சேர்ந்த இத்திட்டப்பணியின் சர்வேச ஒத்துழைப்பு அறிவியலாளர் மிங் ஹுயின் அம்மையார் கூறியதாவது

பெரும் வெடிப்பிலிருந்து கேலிகஸியின் தோற்றம் வரையான இருண்டகாலம் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது SKAஇன் முதலாவது கடமையாகும். கேலிகஸி மற்றும் நட்சத்திரங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும், விண்வெளியில் பெரும் அளவில் நிலவும் இருள் ஆற்றலையும், இருள் பொருட்களையும் ஆராய்வது அதன் இரண்டாவது கடமையாகும். தவிர, உயிரினங்களின் பிறப்பு, புவியைத் தவிர விண்வெளியிலும் உயிரினங்கள் நிலவுவதற்கான சாத்தியம் முதலியவற்றை ஆராய்வதற்கும் இது துணை புரியும் என்று மிங் ஹுயின் அம்மையார் கூறினார்.

அதிகமான மக்களுக்கு அறிமுகமாகியிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியுடன் ஒப்பிடும் போது, SKAஇன் தனிச்சிறப்பு என்ன?

பல்வகை மின்காந்த அலைகளில் ஒளி வகைகள் மக்கள் மிகவும் எளிதாகக் கண்டறியக் கூடியவை ஆகும். காரணம் கண்களால் அவற்றைக் காணமுடியும். ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் ஒளி வகைகளைச் சேகரிக்கிறது. இது ஒளியியல் தொலைநோக்கி என்று அழைக்கப்படுகிறது.

ஒளி அலைகளைத் தவிர, பல மின்காந்த அலை வகைகள் உள்ளன. சிறப்பான ஆய்வு சாதனங்களின் மூலம் அவற்றைக் கண்டறிய வேண்டும். இத்தகைய மின்காந்த அலைகளைக் கண்டறிய, மனித குலம் பல்வகை தொலைநோக்கிகளைக் கண்டு பிடித்துள்ளது. வானொலி தொலைநோக்கியும் அவற்றில் ஒரு வகை தான்.

வானொலி அலையின் அலைநீளம் குறிப்பிட்ட அளவிலானது. அதிர்வெண் தாழ்ந்தது. சிறு சிறு துகள்களாகத் தெரியும் தொலைவில் உள்ள விண்மீன் கூட்டத்தை இதனால் கடந்து செல்ல முடியும். ஆகையால், வானொலி தொலைநோக்கி மூலம் விண்மீன் கூட்டத்துக்கு அப்பால், ஒளியியல் தொலைநோக்கி மூலம் கண்டறிய முடியாத நட்சத்திரங்களை மக்கள் கண்டறிய முடியும். வானொலி தொலைநோக்கியின் முக்கியத்துவத்தைப் பற்றி வானியல் அறிவியலாளர் சேமன் திரேவர் கூறியதாவது

விண்வெளி முழுவதையும் அறிந்து கொள்ள விண்வெளியில் அனைத்து மின்காந்த அலைகளையும் தொகுத்து ஆராய வேண்டும். ஒளி தொலைநோக்கியையோ, வானொலி தொலைநோக்கியையோ பயன்படுத்தி தனித்தனியாக விண்வெளியின் ஒரு பகுதியை மட்டும் பற்றிய தகவல்களையே சேகரிக்க முடியும். விண்வெளி முழுவதையும் அறிந்து கொள்ள அவற்றை ஒருங்கிணைத்து ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.

SKA என்பது அறிவிலாளர்கள் வடிவமைத்த அடுத்த தலைமுறை வானொலி தொலைநோக்கியாகும். சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் இந்தச் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணியில் பங்கெடுத்துள்ளன.

திட்டப்படி, பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் 15 மீட்டர் வட்டமுடைய 3000 கோள கண்ணாடிகள் பொருத்தப்படும். நிலத்தடி கண்ணாடி இழை கேபிள் அவற்றை இணைக்கும். இத்தகைய ஒரு பெரிய கண்ணாடி தொகுதி (mirror array ) உருவாக்கப்படும். 3000 கோள கண்ணாடிகளத் தொகுத்து வரிசையில் வைத்தால், அவற்றின் மொத்த பரப்பு ஒரு சதுர கிலோமீட்டராகும். ஆகையால், இது Square Kilometer Array என்று அழைக்கப்படுகிறது.

சோதனை செய்த பிறகு, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியையும் தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதியையும் தேர்ந்தெடுத்து அவற்றை SKA திட்டப்பணியை நடைமுறைப்படுத்தும் இடங்களாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு முதலாவது தொகுதியைச் சேர்ந்த 300 வானொலி தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வரும். அப்பொழுது, முன்பு காணாத விண்வெளி காட்சியை மக்கள் கண்டுகளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040