2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான களிமண் பாறை வாயு வளர்ச்சி திட்டப்படி, 2015ம் ஆண்டு வரை நாடு முழுவதிலுமுள்ள களிமண் பாறை வாயு மூலவளம் பற்றிய கள ஆய்வையும் மதிப்பீட்டையும் சீனா அடிப்படையில் நிறைவேற்றும். சீனாவில் களிமண் பாறை வாயு உற்பத்தி குறிப்பிட்ட அளவை எட்டும். ஆண்டு உற்பத்தி அளவு 650 கோடி கன மீட்டரைத் தாண்டும். சீனத் தேசிய எரியாற்றல் ஆணையம் மார்சு 16ம் நாள் இந்தத் தகவலை வெளியிட்டது.
களிமண் பாறை வாயு என்பது உயிரிக் களிமண் களிமண் பாறைகள் மற்றும் அவற்றின் அடுக்கு மாடிகளில் நிலவும் பரப்புக் கவர்ச்சி அல்லது திரிந்து செல்லக் கூடிய இயற்கை எரிவாயுவாகும். மீத்தேன் அதன் முக்கிய உள்ளடக்கமாகும். சுத்தமான உயர் பயனுள்ள ஒரு எரியாற்றல் வகை இதுவாகும்.
வழக்கமான இயற்கை எரிவாயுவுடன் ஒப்பிட்டால், களிமண் பாறை வாயு வளர்ச்சி திட்டப்பணியின் துவக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. செலவு அதிகம், லாபம் பெறுவதற்கு அதிக நேரம் தேவை. கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவில் களிமண் பாறை வாயு அகழ்வுத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது. 2011ம் ஆண்டு அதன் உற்பத்தி அளவு 17 ஆயிரம் கோடி கன மீட்டரைத் தாண்டியுள்ளது. களிமண் பாறை வாயுவின் வளர்ச்சி உலக எரியாற்றல் துறையிலான புரட்சியாகும் என்று சர்வதேசச் சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் உற்பத்தி அளவை இது அதிகரிப்பதுடன், உலக இயற்கை எரிவாயுச் சந்தை, எரியாற்றல் விநியோகக் கட்டமைப்பு, வானிலை மாற்றத்தைச் சமாளிக்கும் கொள்கையிலும், ஏன் அரசியலிலும் கூட முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.