ஆசிய மகளிர் T20 கிரிகெட் போட்டி சீனாவின் குவாங்சோ நகரில் 31ஆம் நாள் நிறைவடைந்தது. பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணித் தலைவர் மித்தாலி ராஜ், முக்கிய வீராங்கணை ஜுலன் கௌஷ்வாமி ஆகிய இருவரும் காயமடைந்ததால், இன்றைய போட்டியில் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி, முதலில் 81 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 சுற்றுகளில் 63 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.