பல சக விளையாட்டுத் குழந்தைகளும் விளையாட்டுப் பொம்மைகளும் நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு சிறப்பான மூளை திறனும், நினைவாற்றலும், கல்வியறிவு பயிலும் ஆற்றலும் இருக்கும். அண்மையில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தின் ஆய்வாளர்கள் நியூரான்கள் எனும் அமெரிக்க அறிவியல் இதழில் வெளியிட்ட கட்டுரை இதைத் தெரிவிக்கிறது.
அதிக வெளிப்புறத் தூண்டுகளுடன், மூளை நரம்பு உயிரணுக்களிலுள்ள kinesinயின் அளவும் அதிகரிக்கும். மூளையின் திறன் அதனால் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று விலங்கு ஆய்வு மூலம் கிடைத்த தகவல் கூறுகிறது.
ஆய்வில் ஒரு பெட்டியில் பல்வகை விளையாட்டுப் பொம்மைகளை ஆய்வாளர்கள் வைத்திருந்தனர். பிறகு 15 சிறிய எலிகள் இந்தப் பெட்டியில் 4 வார காலத்துக்கு வாழ்ந்தன. வேறு ஒரு பெட்டியில் 3 எலிகள் வளர்க்கப்பட்டன. ஆனால் அதில் விளையாட்டுப் பொம்மைகள் இல்லை. ஒரு திங்களுக்குப் பிறகு 2 குழுக்களைச் சேர்ந்த எலிகளின் நினைவாற்றலையும் கல்வி பயிலும் திறனையும் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வாளர்கள் அவற்றை ஒரு நீச்சல் குளத்தில் வைத்து, குளத்திலுள்ள தீவை அவை சென்றடையும் நேரத்தைப் பதிவுச் செய்தனர். பயிற்சி எண்ணிக்கை அதிகரிப்பதுடன் முதல் பெட்டியில் வாழ்ந்திருந்த எலிகளின் நீச்சல் வேகம் இதர எலிகளை விட அதிகமாக அதிகரித்தது.
முதல் பெட்டியில் வாழ்ந்திருந்த எலிகள் அதிக வெளித்தூண்டுகளைப் பெற்றன. அவற்றின் மூளையில் KIF1A எனும் kinesin அதிகரித்தது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.