விண்வெளியிலுள்ள கழிவுப் பொருள் ஒன்றுடன் மோதுவதைச் சர்வதேச விண்வெளி நிலையம் அண்மையில் வெற்றிகரமாகத் தவிர்த்துள்ளது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் மார்ச் 24ம் நாள் இதை அறிவித்தது.
முன் மதிப்பீட்டின் படி, அந்தக் கழிவுப் பொருள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அப்பால் 11 முதல் 14 கிலோமீட்டர் வரையான இடத்தில் கடந்து சென்றிருந்தது. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையம் எதிர்பாராதவாறு பாதிக்கப்பட்ட பின் கூடிய விரைவில் தப்பி செல்வதற்காக, 6 விண்வெளி வீரர்கள் கட்டளையின் படி தற்காலிகமாக விண்வெளி நிலையத்துடன் இணைந்த சுயூஸ் விண்கலத்துக்குள் நுழைந்தனர். இந்த விண்வெளி கழிவுப் பொருள் கடந்து சென்ற பிறகு தான், அவர்கள் விண்வெளி நிலையத்துக்குத் திரும்பினர்.
2009ம் ஆண்டு அமெரிக்காவின் செய்தித் தொடர்பு செயற்கைக் கோள், ரஷியாவின் கழிவுச் செயற்கைக் கோளுடன் மோதிய பிறகு உருவாகிய கழிவுப் பொருள் இதுவாகும் என்று அமெரிக்கா நாசா நிறுவனம் தெரிவித்தது.