2010 சீன நகரக் குழுக்களின் வளர்ச்சி என்ற அறிக்கையை சீன அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்டது. சீனாவில் 23 நகரக் குழுக்கள் உள்ளன. அவற்றில் யாங்சி ஆற்றுக் கழிமுகப் பிரதேசத்திலுள்ள நகரக் குழு சர்வதேசத்தில் மிகப் பெரிய 6 நகரக் குழுக்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறியது.
மேலும் 10 முதல் 20 ஆண்டுகள் வரையான காலக் கட்டுமானம் மூலம், யாங்சி ஆற்றுக்கழிமுகம், முத்து ஆற்றுக்கழிமுகம், பெய்ஜிங், தியேன் ச்சின் மற்றும் ஹே பெய் பிரதேசம் ஆகிய 3 நகரக் குழுக்களை சீனாவின் மிகப் பெரிய, ஆசிய-பசிப்பிக் பிரதேசத்தில் போட்டியாற்றல் மிக்க உலக அளவிலான நகரக் குழுவாக கட்டியமைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை முன்மொழிந்தது.
வடகிழக்கு அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோரத்திலுள்ள நகரக் குழு, வட அமெரிக்காவின் 5 பெரிய ஏரிப் பகுதியிலுள்ள நகரக் குழு, பிரிட்டனின் லண்டன் நகரக் குழு, வடமேற்கு ஐரோப்பாவிலுள்ள நகரக் குழு, ஜப்பானின் பசிபிக் கடலோரப் பிரதேசத்திலுள்ள நகரக் குழு ஆகியவை உலகில் மிகப் பெரிய நகரக்குழுக்களாகும்.