இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் புகழ்பெற்ற நகரான வெனிஸ் கடலில் மூழ்கி வருகிறது. அது மூழ்கும் வேகம் ஆண்டுக்கு சுமார் 2 மில்லி மீட்டராகும். இந்த வேகம் முன்பு மதிப்பிட்டதை விட 5 மடங்கு விரைவாக உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கூறுவதாக டைலி மைல் எனும் பிரிட்டன் செய்தியேடு மார்ச் 26ம் நாள் அறிவித்தது.
முந்தைய ஆய்வுத் தரவுகளின் படி, வெனிஸ் நகரிலுள்ள கடல் மட்டம் நிதான நிலையில் உள்ளது. ஆண்டுக்கு 0.4 மில்லி மீட்டர் மட்டும் அது உயரும். ஆனால், இந்த நகரத்தின் வடக்குப் பகுதி ஆண்டுக்கு 2 முதல் 3 மில்லி மீட்டர் வரை கீழே மூழ்கி வருகிறது. அதன் தென் பகுதி 4 மில்லி மீட்டர் அளவு மூழ்கியுள்ளதாக புதிய அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் சென் டியாகோ பிரிவைச் சேர்ந்த ஸ்கிலிப்ஸ் கடலியல் ஆய்வகத்தைச் சேர்ந்த முனைவர் யெவூதா பொக் இது பற்றி விளக்கினார். வெனிஸ் நகரம் இயற்கை காரணமாக மூழ்கி வருகிறது. புவி ஓட்டுப் பலகைகளின் செயல்பாடுகள் காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். அதேவேளையில், நகரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதிலும் வெனிஸ் நகரம் கவனம் செலுத்த வேண்டும் என்று பொக் கூறினார்.
தவிர, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டத்தின் உயர்வுப் பிரச்சினையை வெனிஸ் நகரம் சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் முனைவர் யெவூதா பொக் சுட்டிக்காட்டினார்.