மார்சு 23ம் நாள் உலக வானிலை நாளாகும். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை உலகளவில் காலநிலை மாற்றப் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. அந்த 10 ஆண்டுகளில் மிக வெப்பமான வானிலை நிலைமை காணப்பட்டுள்ளது என்று உலக வானிலை அமைப்பு இவ்வாண்டு உலக வானிலை நாளில் வெளியிட்ட அறிக்கை கூறியது.
அந்த 10 ஆண்டுகளில் உலகின் சராசரி தட்பவெப்பம் கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட 0.166 திகிரி செல்சியஸ் உயர்ந்தது. 2007ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் வட துருவப் பகுதியில் கடல் பனிக்கட்டியின் பரப்பு 42.8 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். வரலாற்றுப் பதிவில் இது மிகக் குறைவானதாக உள்ளது. புவி, காற்று, கடல் முதலியவற்றில் காலநிலை வெப்பமேறல் கொண்டு வரும் தாக்கம் மாற்றப்பட முடியாததாகும் என்று உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலாளர் மிசேல் யாரோட் கூறினார்.