• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும்
  2012-11-30 09:53:23  cri எழுத்தின் அளவு:  A A A   

12 மணிக்கு முன்னதாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த நினைவிடத்தின் இருபுறமும் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளது. ஒன்று தேசிய மாநாட்டு கூட்ட அரங்கு, மற்றொன்று தேசிய அருங்காட்சியகம். இதனை அடுத்து நாங்கள் மதிய உணவினை தலைவர் கலைமகள், தேன்மொழி மற்றும் மேகலாவுடன் இணைந்து சாப்பிட்டோம். அந்த உணவினை சாப்பிட்ட இடம் முக்கியமானது. ஆம் அது அரண்மனை அருங்காட்சிய நுழைவாயிளில் உள்ள ஒரு உணவகம். அதன் பின் நாங்கள் சென்றது அரண்மனை அருங்காட்சியகம். மிகப்பெரிய அந்த அரச மாளிகையை ஒரு நாளில் நிச்சயம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அது பெரிது. எனக்காக தேன்மொழி அவர்கள் ஆங்கிலத்தில் வழிகாட்டக் கூடிய ஒரு தானியங்கி வழிகாட்டியை வாங்கித் தந்தார்கள். கலைமகளும் இடையிடையே அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். அங்கு நாங்கள் பார்த்த முக்கியக் காட்சியகங்களில் ஒன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த அருங்காட்சியகம். கலைநயம் கொண்ட பல்வேறு கடிகாரங்கள் அந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரண்மனைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக எழுதத் தகவல்களை அங்கு பார்த்தேன். அவை நிச்சயம் விரிவாகப் பதிவுசெய்யப்படும். இரவு தமிழ் பிரிவினருடன் சீன வானொலிக்கு சொந்தமான உணவகத்தினில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பில் அனைவருக்கும் நினைவுப் பரிசினை எங்களின் மன்றம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பினில் வழங்கினேன். அதில் முக்கியமானது, காந்தளகம் பதிப்பகம் வெளியிட்ட உலகப்படம். அதில் உலக நாடுகளுடன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத் தொடர்புகள் மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இடங்கள் ஆகியவை அந்தப் பெரிய சுவற்றில் மாட்டப்படும் வரைபடத்தினில் உள்ளது. அத்துடன் சின்னப்பா தமிழர் எழுதி தமிழம்மா பதிப்பகம் வெளியிட்ட 'தமிழரின் காலக் கணக்கு'எனும் சிறு நூலினை அன்பளிப்பாக தமிழ் பிரிவின் பணியாளர்களுக்கு வழங்கினேன்.

அந்த நூலின் சிறப்பு யாதெனில், சீன எண்களை தமிழ் எண்களுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை அதில் எழுதப்பட்டுள்ளதாகும். அது மட்டுமல்லாமல் அகில இந்திய வானொலி வர்த்தக சேவையின் இயக்குனர் முனைவர் சேயோன் அவர்களின் தெளிவுரையுடன் வெளிவந்துள்ள திருக்குறள் கையடக்க பதிப்பினையும் வழங்கி மகிழ்ந்தேன். நான்காம் நாள் பயண அனுபவங்கள் அடுத்த கட்டுரையில்... - தங்க.ஜெய்சக்திவேல் நான்காவது நாள் பயண விபரங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040