• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போதிசத்துவரும் லாமாக் கோவிலும்
  2012-12-03 09:28:34  cri எழுத்தின் அளவு:  A A A   
நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள்.

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன்.

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது.

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

அங்குள்ள புத்தர் சிலைகள் பலவற்றின் பெயர்கள் நமது தமிழ் பெயருடன் ஒன்றிணைகிறது. மிக முக்கியமாக சாக்கியமுனி, போதிசத்துவர், சிம்கநாதா மற்றும் பைசாஜ்ஜிய குரு போன்ற பெயர்களைக் கூறாலாம்.

மாலையில் நாங்கள் சென்றது லோட்டஸ் தெரு. அடேங்கப்பா... என்றது மனது, காரணம் அவ்வளவு வகையான மதுக்கடைகள். அங்கே எந்தக்கடையிலும் நம் ஊரைப் போன்று கூட்டம் இல்லை. பெரிய பெரிய டின்னில்களில் தான் மது வகைகளை விற்கிறார்கள். ஆனால் அங்கு நான் காபி மட்டுமே குடிதேன் என்றால் யாரும் நம்ப மாட்டீகள். எனக்கான காபியை ரூ.180 கொடுத்து சரஸ்வதி வாங்கிக் கொடுத்தார்கள்.

அதன் பின் மாலையில் நாங்கள் சீன தேசிய அக்ரோபடிக் குழுவின் நடனத்தினைக் காண சென்றோம். முதலில் நான் நினைத்தேன், இது சாதாரண சர்கஸ் நிகழ்ச்சி தானே என்று. அதன் பின் தான் உணர்ந்தேன் எவ்வளவு அருமையான இந்தக் கலையை சாதாரண சர்கஸ் என்று நினைத்துவிட்டேன் என்று.

அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதில் ஆடப்பட்ட Buck Jump, Butterfly dancing, Bamding ball, Color umbrellas, Advancement tumbling மற்றும் Bicycle skill போன்றவற்றை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி விரிவாக உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு திறமை. காண கண் கோடி வேண்டும். வாழ்நாளில் கண்டிப்பாக இது போன்றதொரு விளையாட்டினை அனைவரும் ஒரு முறையேனும் காண வேண்டும். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் - தங்க.ஜெய்சக்திவேல்
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040