வெப்ப மண்டலத் தீவுகள் மற்றும் கடலோரப் பிரதேசத்திலுள்ள உயிரின வளம் பற்றிய ஆய்வை சீனா அண்மையில் துவக்கியது. சீன அறிவியல் கழகத்தின் தென் சீன தாவரப்பூங்காவின் தலைமையில், ஹைநான் மாநிலத்தின் துங் சாய் துறைமுகம், பென் ச்சியே சோ தீவு, துங் குலிங் தீவு மற்றும் கடலோரப் பிரதேசத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படத் துவங்கியது.
துவக்க நிலை ஆய்வில், மேற்கூறிய இடங்களில் மொத்தம் 500 தாவர மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதிரியின் மூலக்கூற்று மூலப்பொருட்களும் பதிவுச் செய்யப்பட்டன.
இவ்வாய்வு மூலம், ஹைநான் தீவு, xisha தீவுகள் மற்றும் கடலோரப் பிரதேசத்திலுள்ள சிறப்பு உயிரின வளம் பற்றிய தரவுகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புகிறது.