டிசம்பர் 9ஆம் நாள் ஊலின் எனப்படும் பல்வகை குங்ஃபூ கலைகளின் விழாவின் துவக்கத்தில் கலந்துகொண்டுள்ள வீரர்கள் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். அன்று, 2012ஆம் ஆண்டு சீன குங்ஃபூ பொருட்காட்சி விழா, 7வது தேசிய ஊலின் மாநாடு மற்றும் குவெய் சோ மாநிலத்தின் முதல் குங்ஃபூ விளையாட்டுப் போட்டி ஆகியவை சீனாவின் குவெய் சோ மாநிலத்தின் சிங் சென் நகரில் துவங்கின. நாட்டின் 10க்கு மேலான புகழ்பெற்ற குங்ஃபூ வல்லுநர்களும் 33 குங்ஃபூ பிரிவுகளின் தலைவர்களும் ஊலின் மாநாட்டில் தனிச்சிறப்பு மிக்க குங்ஃபூ கலைகளை அரங்கேற்றிக் காட்டுவர்.