நுண்பாசிகளால் பயோடீசல் உற்பத்தி செய்ய பிரேசில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரேசில் எண்ணெய் கூட்டு நிறுவனம் முதலீடு செய்த நுண்பாசி வளர்ப்பு ஆய்வுத் திட்டப்பணி அண்மையில் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
நுண்பாசிக்கு மாபெரும் உள்ளார்ந்த வளர்ச்சி ஆற்றல் உண்டு. அவ்வாய்வு வெற்றி பெற்றால் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். ஒருபுறம், நுண்பாசி அதிக கரியமில வாயுவை உட்கொள்ளலாம். நீரின் தரத்தை மேம்படுத்த முடியும். மறுபுறம் அது பயோடீசல் உற்பத்திக்கான மூலப்பொருளாக இருக்கலாம் என்று பிரேசில் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
நுண்பாசி கடலில் வாழும் ஒரு வகை பாசியாகும். அதற்கு அதிக ஈஸ்டர்கள் மற்றும் கிளிசரின் உண்டு. அதிலிருந்து திரவ எரிபொருளை கூர்மையாக்கம் செய்யலாம். தற்போது, நுண்பாசிகளால் பயோடீசல் உற்பத்தி செய்வது, சர்வதேசத்தில் பெட்ரோலியத்துக்கு பதிலான எரிபொருளைக் கண்டறியும் வழிமுறைகளில் முக்கியமான ஒன்றாகும்.