அரண்மனை அருங்காட்சியகம், பெய்சிங் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பேரரசர்கள் இங்குள்ள அரண்மனைகளில் வாழ்ந்த போது, பொது மக்கள் இவ்விடத்திற்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்த்து. அதனால், forbidden city அதாவது தடை செய்யப்பட்ட நகரம் என்ற பெயரும் இவ்விடத்திற்கு உண்டு. அரண்மனை அருங்காட்சியகம், கி.பி.1420ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பண்டைகால வரலாற்றில், மின், சின் இரு வம்ச வாரிசுகளில், மொத்தமாக 24 பேரரசர்கள் இங்கே வாழ்ந்தனர். இப்போது, அரண்மனை அருங்காட்சியகத்தில், பெரும்பகுதி மரத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டியமைக்கப்பட்ட உலகளவில் மிகப்பெரிய பண்டைகால மாளிகை தொகுதிக் கட்டிடங்கள் பல உள்ளன. இங்கே, மொத்தமாக 9999 மாளிகைகள் உள்ளன.
தங்க மஞ்சள் வண்ண சிகரங்கள், சிவப்பு வண்ணத் தூண்கள் மற்றும் சுவர்கள், மயில் வண்ணத் தாழ்வார உத்திரங்கள், பளிகு கல்லால் செதுக்கப்பட்ட நடைபாதை ஓர பிடிச்சுவர்கள் மற்றும் மாடி, அவற்றின் பல்வண்ணங்கள் அனைத்தும் தெளிவாக தோன்றுகின்றன.
Feng Xian எனும் மாளிகை, பண்டைகாலத்தில், பேரரசரின் மூதாதையர்களுக்கு திருப்படையல் செய்யும் இடமாகும். இப்போது, அது, பழங்கால கடிகாரக் கலைப் பொருட்களின் காட்சியிடமாக இடமாக மாறியுள்ளது. இதற்குள்ளே, 18வது நூற்றாண்டில், அன்பளிப்பாக சீனப் பேரரசர்களுக்கு வழங்கப்பட்ட பல கலையம்சக் கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டவை.