சீனப் பெருஞ்சுவருக்குப் செல்கின்ற வழியில், திரு. தங்க சக்திவேல் அவருடன் சேர்ந்து சீனாவில் பயணம் மேற்கொள்கின்ற இந்திய நண்பருக்கு மகிழ்ச்சியோடு பேட்டி அளித்தார். முதலாவது நுழைவாயிலுக்குப் பின், நாங்கள் ஜூயொங் குவான் நுழைவாயிலில் ஏறினோம். பொருஞ்சுவரின் வட பகுதியிலுள்ள புகழ் பெற்ற நுழைவாயில் இதுவாகும். ஜூயொங் குவான் நுழைவாயிலின் நிலை அமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. பண்டைகாலம் தொட்டு, இது இராணுவ முக்கியத்துவம் மிக்க இடமாகும். அதன் இரு பக்கங்களிலும் உயரமான மலைகள் காணலாம். கண்களை ஈர்க்கும் எழில் மிக்க இயற்கைக் காட்சிகள் இங்குள்ளன. பொதுவாகக் கூறினால், பெருஞ்சுவரின் உயரமான இடங்களில் feng huo tai என்ற கண்காணிப்புக் கோபுரங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில், எதிரிகள் ஆக்கிரமித்தபோது, வீரர்கள் feng huo tai இல் ஓநாயின் சாணத்தை எரித்து புகை உண்டாக்கினர். பிற அனைத்தும் feng huo tai களிலுள்ள வீரர்கள் அந்த புகையைக் கண்டு, அதேபோல் ஓநாய் சாணத்தை எரித்து புகை எழச் செய்தனர். அந்தப் புகையைக் கண்ட அனைவருக்கும் எச்சிக்கை அடைந்தனர். ஆமாம், விழிப்புடன் இருக்க எச்சரிக்கை தகவலைப் பரப்புவதற்கு feng huo tai பயன்படன.