சீன சென் ச்சென் மீவேக கணினி மையத்தில் இயங்குகின்ற வினாடிக்கு 10 கோடிகோடி முறை என்றும் கணக்கீட்டுத் திறனுடைய கணினி அண்மையில் சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. சிங் யூன் என்னும் இந்த மீவேகக் கண்னி சில சிறப்பு பயன்பாட்டாளர்களுக்குச் சேவை புரியத் துவங்கியுள்ளது.
சீனாவின் முதலாவதும் உலகில் 3வதுமான வினாடிக்கு 10 கோடிகோடி முறை என்றும் கணக்கீட்டுத் திறனுடைய கணினி இதுவாகும். சீன அறிவியல் கழகத்தின் கணக்கீட்டுத் தொழில் நுட்ப ஆய்வகத்தால் ஆராயப்பட்டு, shuguang பெய்ஜிங் தகவல் கூட்டு நிறுவனத்தால் இது தயாரிக்கப்பட்டது. சீனாவின் புதிய தலைமுறை கிளவுட் கம்ப்யூட்டிங் மையத்தின் முக்கிய கணினி வசதியும் இதுவாகும். பல்வகை பெருமளவுடைய அறிவியல் கணிக்கீடு மற்றும் திட்டப்பணி கணக்கீட்டுக் கடமைகளை இது நிறைவேற்றலாம்.
சிங் யூன் கணினி மூலம், சுகாதார கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை புரிய சென் ச்சென் மீவேக கணினி மையம் துவங்கியுள்ளது. பொது மக்களின் சுகாதார நிலைமை பற்றிய மின்னணுக் கோப்புகளின் அடிப்படையில், முழு மருத்துவ சிகிச்சை மற்றும் சுதாகாரத் தொகுதியிலும் பயன்படுத்தப்படக் கூடிய செயல்பாட்டுக் களத்தை இது உருவாக்கியது. பொது மக்களுக்கு இந்த செயல்பாட்டுக்களம் வசதியான விரைவான சுகாதார தகவல் சேவை புரியலாம்.