சீனாவின் முதலாவது அன்னாசி அறிவியல் விருது ஏப்ரல் 7ம் நாள் கிழக்குப் பகுதியிலுள்ள ஹாங்சோ நகரில் வழங்கபட்டது. ச்சே ச்சியாங் மாநில அறிவியல் தொழில் நுட்ப அரங்கும் அனைத்து அறிவியல் தொழில் நுட்ப ஆர்வம் கொண்டவர்களுக்கான www.guokr.com இணையமும் கூட்டாக இவ்விருதுக்கு ஏற்பாடு செய்தன. கற்பனை திறனுடைய சுவையான அறிவியல் ஆய்வு முன்னேற்றங்களுக்கு பரிசளித்து, அறிவியல் துறையில் சீன மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவது இவ்விருதின் நோக்கமாகும்.
ஆர்வத்துக்கு மதிப்பு வழங்கும் விருது இதுவாகும் என்று இவ்விருதின் தலைமைக் கண்காணிப்பாளர் வாங் யாமி கூறினார். ஆர்வம் தான் மனித குலத்தை ஒன்றுடன் மற்றொன்று ஒத்துழைக்கின்ற அறிவியல் ஆய்வுக்கு வழிகாட்டி வருகின்றது. ஆர்வத்தால் தான் அச்சுறுத்தல்கள் நிறைந்த உலகில் மனித குலம் சிறப்பாக வாழ்ந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
15 அறிவியலாளர்கள் அடங்கிய நடுவர் குழு மற்றும் 26 புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள், திரைப்பட நடிகர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய குழுவின் பரிசீலைனை மூலம் 5 துறைகளிலான அன்னாசி விருதுகள் வழங்கப்பட்டன. பொறியியல் துறையில் குரங்கு மூளை கட்டுப்பாட்டு இயந்திர கையும், வேதியியல் துறையில் மட்கலத்தில் சமைக்கப்பட்ட கோழி சூப்பின் சுவைப் பொருள் மீதான ஆய்வும், மருத்துவ மற்றும் உயிரினத் துறையில் குரோமோசோம் Y மூலம் மன்னர் சோ ச்சோவின் பிறப்பு ஆயத்தை அறிந்து கொள்வதும், கண்ணியல் துறையில் சீன டிராகன் ஆண்டின் வசந்த விழாவின் இரவுக் கலை நிகழ்ச்சியில் இயந்திர மனிதனின் நடனமும், உளவியல் துறையில் பணத்தைக் கணக்கிடுவது மூலம் வலியைக் குறைக்கலாம் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வாண்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2005ம் ஆண்டு மருத்துவ மற்றும் உயிரின நோபல் பரிசு பெற்ற பாலி மச்சேல் விருதளிக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
அறிவியலாளர்கள் பொதுவாக பணம் பற்றி குறிப்பிட விரும்பவில்லை. சீன சுங் சான் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் சோ சின் யுயே, பணத்தைக் கணக்கிடுவது மூலம் வலியைக் குறைக்கலாம் என்ற ஆய்வுச் சாதனை மூலம் உளவியல் துறையிலான முதலாவது அன்னாசி விருதைப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளில், அவரும் தனது குழுவினர்களும் 500 முறை பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர். பணத்தைக் கணக்கிடுவது, பணம் உள்ளிட்ட சொல்லுடன் வாக்கியத்தை அமைப்பது ஆகியவை மூலம், ஆய்வில் சேர்க்கப்பட்டவர்களின் வலியைக் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவு காட்டுகிறது. இதுவரை பல உலகளாவிய செய்தி ஊடகங்கள் இவ்வாய்வைப் பற்றி அறிவித்தன. பிரிட்டனின் பி.பி.சி நிறுவனம் இது பற்றிய அறிவியல் பதிவுத் திரைப்படத்தை எடுத்தது.