டிசம்பர் 25ஆம் நாள், சீன மொழிப் பாலம் என்ற இந்திய பல்கலைக்கழக இளைஞர்களின் குளிர்க்கால கல்வி முகாம் நடவடிக்கை, நிறைவடைந்தது. 21 இந்திய ஆசிரியர்களும் இளைஞரும், இளம் பெண்களும் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, இந்தியா திரும்பினர். அவர்கள் பெய்ஜிங்கிலுள்ள கோடைக்கால மாளிகை, அரண்மனை அருங்காட்சியகம், பறவைக் கூடு எனப்படும் சீனத் தேசிய விளையாட்டரங்கு முதலிய இடங்களை பார்வையிட்டனர். தவிர, சீனத் தேசிய சீன மொழி அலுவலகத்தின் கம்ஃபியூசியஸ் கழகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற குளிர்க்கால கல்வி முகாமின் நிறைவு விழாவிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நடவடிக்கையில் கலந்து கொண்டோர், இந்திய வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்தவராவர். சீனாவிலுள்ள அனைத்தும் ஈர்ப்பதாகவும், சீனக் குங்ஃபூ கலை மிகவும் பிடிக்கும் என்றும் சீனாவின் ட்செங்ட்சௌ நகரில் சீனப் பண்பாட்டை அனுபவித்துள்ள இளம் பெண் ஏஞ்சல் தெரிவித்தார்.