• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்:செல்லிடப்பேசியின் பாதுகாப்பு நெகிழ் மேலுறை
  2013-01-09 19:45:33  cri எழுத்தின் அளவு:  A A A   

அழகு மற்றும் பாதுகாப்புக்காக, பலர் புதிய செல்லிடப்பேசியை வாங்கிய பின் உடனடியாக அதன் திரையின் மேல் நெகிழ் மேலுறையை ஒட்ட விரும்புகின்றனர். ஆனால், அந்தச் மேலுறை அவர்களுக்கு மயக்க உணர்வு, தலை சுற்றல், மங்கலான பார்வை முதலிய பிரச்சினைகளைக் கொண்டு வரும்.

ஹால்பின் மருத்துவயியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4வது மருத்துவமனையின் கண்ணியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஹான் சிங் அதற்கான காரணத்தை எங்களுக்கு விவரித்தார். மக்கள் நீண்டகாலமாக செல்லிடப்பேசியின் திரையைப் பார்த்தால், குறிப்பாக திறந்தவெளியில் நெகிழ் மேலுறையைப் பயன்படுத்திய செல்லிடப்பேசியின் திரையைப் பார்த்தால், வலி, கண்ணீர் வருதல், ஒளி அச்சம் Eyes photophobia முதலிய பிரச்சினைகள் வரும். அவை எல்லாம் கண்பார்வை களைப்புடன் தொடர்புடையவை. செல்லிடப்பேசியில் ஒட்டப்பட்ட நெகிழ் மேலுறை திரையின் ஒளியை முறித்து விலக செய்கிறது. அதனால், கண்கள் களைப்படையும். குறிப்பாக திறந்தவெளியில் இருக்கும் போது, திரையின் ஒளி ஆற்றல் போதாததால், எழுத்துக்கள் தெளிவாகக் காணப்படாது. அதனால் கண் தசைகள் இறுக்கமாக வேண்டியுள்ளது. படிக வில்லைகளும் அதிக பட்சமாக குவிதலை நிலைநிறுத்தும். நீண்டகால அளவில் கண்பார்வை குறுகிவிடுவது இயல்பே என்று பேராசிரியர் ஹான் சிங் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளில் உற்பத்தி செய்த செல்லிடப்பேசிகள் மற்றும் டேப்ளட் கணினிகளின் திரைகளின் தேய்மானத் தடுப்பாற்றல் பரவாயில்லை. அவற்றுக்கு மேலுறை ஒன்றும் தேவையில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040