வாழ்க்கையில் 33 வயது என்பது மிக மகிழ்ச்சியாக உணரும் காலமாகும் என்று ஒருபுதிய ஆய்வு முடிவு காட்டுகிறது. FRIENDS REUNITED என்ற பிரிட்டனின் இணையம் ஒன்று அண்மையில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அவர்களில் தொழில் முனைவோர், திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட புகழ்பெற்றவர்கள் பலர் அடங்குவர். அவர்களில் பலர் 33 வயதளவில் வாழ்க்கையிலும் இலட்சியத்திலும் முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளனர். 33 வயது மிகவும் மகிழ்ச்சியான வயதாகும் என்று அவர்களில் 70 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். குழந்தை பருவத்தில் மிக மகிழ்ச்சியாக இருந்தனர் என்று வேறு 16 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
குழந்தைகள் பிறந்த பிறகு மிக மகிழ்ச்சியாக இருந்ததாக கருத்து கணிப்பில் சேர்ந்த மூன்றில் ஒரு பகுதி மக்கள் கூறினர். ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மட்டும் மகிழ்ச்சி உணர்வை அவர்களது பணியுடன் தொடர்பு படுத்துகின்றனர்.