இமயமலைப் பிரதேசத்திலுள்ள பனி ஏரிகளின் நடைமுறை நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை சீன அறிவியல் கழகத்தின் குளிர் மற்றும் வெப்ப மண்டலச் சூழல் மற்றும் பொறியியல் ஆய்வகம், ஹுனான் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்டனர். நெடுந்தூரத் தொழில் நுட்ப வசதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு மூலம் இவ்வறிக்கையில் இமயமலைப் பிரதேசத்திலுள்ள பனி ஏரிகளின் எண்ணிக்கை, வகைகள், பரவல் ஆகியவை பற்றி புதிய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பிரதேசத்தில் பனி ஏரிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதுடன், பரவலும் அதிகரித்து வருகிறது என்று அறிக்கை கூறியது.
பனி ஏரி என்பது, பனி மலைகள் உடைந்த பிறகு உருவாகும் ஒரு ஏரி வகையாகும். தற்போது, இமயமலைப் பிரேசத்தில் பனி மலைப் பகுதி குறைந்து வருகிறது. இந்த நிலைமை பனி ஏரிகளின் மாற்றத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் உடைந்த பனி மலைகளிலிருந்து வந்த நீர் ஏரிகளில் சேர்ந்துள்ளது. விளைவாக, பனி ஏரிகள் உடைப்பெடுக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை அதிகமான ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இமயமலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து வேறுபட்ட உயரங்களில் அமைந்துள்ள பகுதிகளில் பனி ஏரிகளின் மாற்றம், வானிலைத் துறையில் அதனால் ஏற்பட்டத் தாக்கம் ஆகியவற்றைக் குறித்து சீன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பனி மலை, பனி ஏரி, வானிலை ஆகிய 3 துறைகளின் மாற்றங்களுக்கிடை தொடர்பையும், பனி ஏரிகள் உடைப்பெடுக்கும் அபாயங்களையும் அறிந்து கொள்வதற்கு இவ்வாய்வு துணை புரியும் என்று இவ்வாய்வுப் பணிக்குப் பொறுப்பான பணியாளர்களில் ஒருவரான வாங் சின் கூறினார்.
தற்போது, சீனாவின் இமயமலைப் பிரதேசத்தில் மொத்தமாக 1680 பனி ஏரிகள் உள்ளன. அவற்றின் மொத்த நிலப்பரப்பு 215.28 சதுர கிலோமீட்டராகும். 20ஆம் நூற்றாண்டின் 70வது ஆண்டுகள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தில் பதிவுச் செய்யப்பட்டத் தரவுகளுடன் ஒப்பிட்டால், பனி ஏரிகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறி வருகிறது என்று புதிய ஆய்வு முடிவு காட்டுகிறது.
கடந்த 30 ஆண்டுகளால, இமயமலைப் பிரதேசத்தில் 1456 பனி ஏரிகள் இருந்து வருகிறன. 294 பனி ஏரிகள் அழிந்துவிட்டன. 224 பனி ஏரிகள் புதிதாகத் தோன்றியுள்ளன. மேலும், இப்பிரதேசத்தில் பனி ஏரிகளின் நிலப்பரப்பு 58.96 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது. அதில் புதிதாக தோன்றிய பனி ஏரிகள் சுமார் மூன்றில் ஒரு பகுதிக்குக் காரணமாக உள்ளன.