• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷோதோன் விழா (தயிர் விழா)
  2009-11-24 16:12:35  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் நாள் காட்டியின் படி, ஆண்டுதோறும் ஜுன் திங்களின் இறுதி முதல் ஜுலை திங்களின் துவக்கம் வரை, திபெத்தின் பாரம்பரிய விழாவான ஷோதோன் விழா கொண்டாடப்படும். ஷோதோன் என்பதற்கு, தயிரை சாப்பிடுதல் என்று திபெத் மொழியில் பொருள். எனவே, இது தயிர் விழா என்றும் அழைக்கப்படுகின்றது. முன்பு, ஷோதோன் விழாவை கொண்டாடும் போது மட்டுமே, திபெத் மக்கள் தயிரை சாப்பிடுவர். தற்போது, திபெத் இன மக்களுக்கு தயிர் அன்றாட உணவில் இடம் பெரும் பொருளாக மாறியுள்ளது.

புத்தர் சிலைகளை வெளியே எடுத்துக்காட்டுதல், சிறப்பு திபெத் கலை நிகழ்ச்சிகளை பெருமளவில் மேற்கொள்ளுதல் ஆகியவை, தற்போது ஷோதோன் விழாவின் கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கிய நடவடிக்கைகளாகும். இதனால், திபெத் இசை நாடக விழாவாகவும், புத்தர் உருவம் கொண்ட தாங்கா ஓவியத்தை எடுத்துக்காட்டும் விழாவாகவும் பொது மக்கள் ஷோதோன் விழாவை அழைப்பது வழக்கம். தாங்கா புத்தர் ஓவியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது, இவ்விழாவின் துவக்கமாகும். மேலும், திபெத் இசை நாடக அரங்கேற்றத்தை பார்வையிடுதல், பூங்காக்களில் குதூகல நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை விழாவின் முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும், மிகச்சிறந்த யாக் எருது போட்டியையும், குதிரை ஏற்ற அரங்கேற்றத்தையும் அப்போது மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

குதிரையேற்றம்(Gettyimages)

ஷோதோன் விழா நாளின் அதிகாலையில், ஊது குழல் மற்றும் ஊதுவத்தி புகைசூழ, லாசாவிலுள்ள திரேபுங் துறவியர் மடத்தில் வாழும் லாமாக்கள் பலர், புத்தர் சிலை கொண்ட மாபெரும் ஓவியத்தை கூட்டாகவும் படிப்படியாகவும் திறக்கின்றனர். எண்ணற்ற பக்தர்களும் ஆழமாக மனமுருகும் பயணிகளும் தங்களது இரண்டு கைகளையும் குவித்து வணங்கி, புத்தருக்கு மதிப்பை தெரிவிக்கின்றனர்.

திரேபுங் துறவியர் மடத்தில் திறக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை ஓவியம்(சீன வானொலி நிலையம்)

ஷோதோன் விழாவுக்கான இரண்டாவது நாள் தொடக்கம், லாசா நகரிலுள்ள நார்பு லிங்கா எனும் பூங்காவிலும் போத்தலா மாளிகைக்கு எதிரேயுள்ள Long wang tan என்ற பூங்காவிலும், திபெத் இசை நாடக அரங்கேற்றங்கள், நாள்தோறும் காலை 11மணிக்கு முதல் சூரியன் மறையும் வரை நடத்தப்படுகின்றன. பூங்காக்களின் புல்வெளியில் வைக்கப்பட்ட மெத்தைகளில் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி மகிழ்கின்றனர். பார்லி மது, வெண்ணெய் தேனீர், வீட்டில் தயாரித்த பல்வகை திபெத் சிற்றுண்டிகள் ஆகியவற்றை அவர்கள் சுவைக்கின்றனர். திபெத் இசை நாடகத்தை கண்டு ரசித்த போது, திபெத் இன மக்கள் பலர் தங்களது கைகளிலான இறைவேண்டல் சக்கரங்களை சுழற்றி அல்லது மணிகளை உருட்டி, இறை வேண்டல் செய்கின்றனர்.

திரேபுங் துறவியர் மடத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டம்(Gettyimages)

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040