வெண்ணெய்யால் செய்யப்படட புத்தர் சிலையை வணங்குகின்ற மத நம்பிக்கையாளர்கள் (சிங்குவா செய்தி நிறுவனம் )
வெண்ணெய் விளக்கு விழா, திபெத் இனத்தின் பாரம்பரிய விழாவாகும். திபெத் நாட்டிகாட்டியின் படி ஆண்டுதோறும் ஜனவரி 15ம் நாள் இது நடைபெறுகின்றது. இதனால், வெண்ணெய் விளக்கு விழா, ஜனவரி 15ம் நாள் விளக்கு விழா என்றும் அழைக்கப்படுகின்றது.லாசா நகரிலுள்ள ஜோகாங் கோயிலில், புத்தர் சிலையின் முன்னால் வழிபடுவதற்காக பயன்படுத்திய வெண்ணெய், ஆடு மற்றும் மாட்டுப் பாலிலிருந்து திரட்டப்பட்டதாகும். திபெத் எருமையின் பாலில் திரட்டிய வெண்ணெயை திபெத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். கோடைக்காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் தயாரிக்கப்படும் வெண்ணெய், மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
லாசாவிலான ஜோகாங் கோயிலின் துறுவிகள், வெண்ணெய்யால் தயாரித்த புத்த மத ஆசிரியர் மற்றும் அவரது சீடர்கள் மூவரின் சிலைகள் (சிங்குவா செய்தி நிறுவனம் )
வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் புத்தர் உருவச் சிலைகள், மனிதர், கட்டிடம், விலங்கு, மலர் ஆகியவை அழகிய கைவினைப் பொருட்களாக அமைகின்றன.
வெண்ணெய் விளக்கு விழா நாளில், திபெத் இன மக்கள், காலையில், திருமறை ஓதுகின்றனர். கோயிலில், கலை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முகமூடிகளையும் பல வண்ண ஆடைகளையும் அணிந்த, 30 திபெத் நடன நடிகர் மற்றும் நடிகைகள் இசையுடன் ஆடிப்பாடுகின்றனர். இரவில், பல்வேறு கோயில்கள், விளக்குகளாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. முக்கிய பாதைகளிலுள்ள, கம்பங்களில், வெண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. வெண்ணெய் விளக்கு ஒளியில், வெண்ணெய் சிலைகள், அழகாக காணப்படுகின்றன.
புத்த விளக்குக்கு எண்ணெய் வார்ப்பது (சிங்குவா செய்தி நிறுவனம் )
ஏற்றப்பட்ட வெண்ணெய் விளக்குகள், பீடபூமியின் இரவில், ஒளிர்கின்றன. திபெத் இன மக்கள், வெண்ணெய் விளக்குகளை சுற்றி, ஆடி பாடி, மகிழ்ச்சியடைகின்றனர். இவ்விழா சில நாட்கள் நீடிக்கின்றது. இது மிக மகிழ்ச்சியான விழா என்றழைக்கப்படுகின்றது.