திபெத் பாணியுடைய நாடகங்கள் திபெத்தின் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்படுகின்றன. பல அரசு சாரா நாடக குழுக்கள் இந்த நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றன. நிகழ்ச்சிகள் பாடல், நடனம், நாடகம் ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. வளைந்து கொடுக்கும் அரங்கேற்ற வடிவம் கண்ணோட்டம், பண்டைய கிரேக்க நாடகம் போன்ற நாடகங்கள் முழுவதும் விளக்கம் அளிக்கப்பட்டு, முகம் மூடி மற்றும் துணை நடனத்துடன் அரங்கேற்றப்படுகின்றன. திபெத் நாடகத்திற்கு வாய்பேச்சு கலையிலக்கியமும் உண்டு.
திபெத் இன மக்களின் பல்வகை விழாக்களில் திபெத் புத்தாண்டு விழா மிக பிரமாண்டமான விழாவாகும். விழா நாட்களில் ஒவ்வொரு குடும்பமும் மங்களம், மகிழ்ச்சி போன்ற அருமையான மொழிகளைக் கொண்டு ஒருவருக்கொருவர் நல்வாழ்த்து தெரிவிக்கின்றனர். புத்தாண்டை வரவேற்கும் நள்ளிரவில் லாசா நகர் முழுவதும் பட்டாசு வெடி சத்தம் காதை பிளக்கிறது. ஆவியை விரட்டியடிக்கும் தீபத்தை ஏந்திய மக்கள் வீதிகள் முழுவதிலும் காணப்படுகின்றனர்.