தமது ஊரிலிருந்து பல உற்பத்தி சாதனங்கள், காய்கறி விதைகள், மருத்துவ சிகிச்சைக்கான சாதனங்கள், பல்வேறு வகை நூல்கள் முதலியவற்றை Wen Cheng இளவரசி, திபெத் மக்களுக்கு கொண்டு சென்றிருந்தார். குறிப்பாக, பட்டுப்புழு, மது தயாரிப்பு, தாள் முதலிய தொழில் நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள், Wen Cheng இளவரசியுடன், திபெத்திற்கு சென்று, தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தனர். தவிரவும், திபெத் மகளிரின் பூத்தையல் நுட்பத்திற்கு Wen Cheng இளவரசி தான் வழிகாட்டினார்.
அதனால், திபெத்திற்க்கும் உள்பிரதேசத்துக்கும் இடையில் பொருளாதார மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் மேலும் அதிகரித்தன.