லாசாவின் உணவு வீதி
லாசா நகரிலுள்ள தேஜி வீதி, உள்ளூரின் தனிச்சிறப்பான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதால் புகழ்பெற்றது. சுவையான பல்வகை உணவுவகைகள் இங்கு உள்ளன. இவ்வீதியில் தான், லாசா நகரவாசிகள் அடிக்கடி விருந்தினருக்கு விருந்து அளித்து உபசரிக்கின்றனர்.
லாசாவின் வணிகப்பொருட்கள் வீதி
லாசாவில் உள்ள பர்கோர் வீதி, சிறிய வணிகப் பொருட்களை விற்பனை செய்யும் மிகவும் புகழ்பெற்ற வீதியாகும். பயணிகளைப் பொறுத்தவரை, மத வழிப்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தாங்கா என்னும் ஓவியங்கள் இவ்வீதியில் ஈர்ப்பாற்றல் மிக்க பொருட்களாகும். தவிர, உள்ளூர் தனிச்சிறப்பியல்பு மற்றும் தேசிய இன பாணியுடைய கம்பளம், திபெத் கத்தி, திபெத் இன ஆடை, நகை முதலிய பாரம்பரிய கைவினை கலைப்பொருட்களை, பயணிகள் இவ்வீதியில் வாங்கலாம்.
ஷிகாசெ
சிற்றூண்டி
பொஃங்பி என்னும் சிற்றூண்டி, ஷிகாசெவில் குறிப்பிடத்தக்கது. திபெத் இன மக்கள் குழுமி வாழ்கின்ற இதர பிரதேசங்களில் இவ்வுணவைப் பார்க்க முடியாது. அவரை சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்க இந்தச் சிற்றூண்டியில், வேறுபட்ட சாஸ்களைச் சேர்த்து சாப்பிடலாம். திபெத் வெங்காயம், கறிமசாலா, எண்ணெய் ஆகிய சுவையான சாஸ்களை உங்களின் விருப்பத்தின் படி சேர்க்கலாம்.
புகழ்பெற்ற காட்சி தல இடங்கள்
ஷிகாசெவின் மேற்கு பகுதியிலுள்ள சோமோலுங்மா சிகரம், உலகில் மிக உயரமான மலையாகும். திபெத் இன மக்களின் மனதில், இச்சிகரம், புனிதமான வெள்ளை பனி செல்வியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் திங்கள் வரை, சோமோலுங்மா சிகரத்தைப் பார்த்து ரசிக்கும் மிக நல்ல காலமாகும். ஷிகாசெ பிரதேசத்தில் சாஷ்லும்பு கோயில், சாக்கா கோயில் பெய்சூ கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற பண்டைய கோயில்கள் உள்ளன. இங்கு நேரில் வந்து பார்தால் தான், திபெத் மத கலைகளின் ஈர்ப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
நிங்ச்சி
உணவு வகைகள்
நிங்ச்சியில், பீடபூமிக் கோதுமையைப் பயன்படுத்தி தயாரித்த மது, சாம்பா, வெண்ணெய் தேனீர் முதலிய பாரம்பரிய திபெத் உணவு வகைகளைத் தவிர, லோபா இனத்தின் மஞ்சள் மது, மக்காச்சோளம், மூங்கில் சோறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வாங்குதல்
நிங்ச்சி எழில் மிக்க இயற்கை மூலவளங்களை கொண்டது. இதில், காட்டு வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சம், ஆரஞ்சி உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள் இடம்பெறுகின்றன. மன்பா இனத்தின் மரக் கிண்ணம், மூங்கில் பின்னல் பொருட்கள், லோபா இனத்தின் கற்பாவி, பீங்காங் பொருட்கள் முதலிய தனிச்சிறப்பான கைவினை கலைப்பொருட்கள் நிங்ச்சியில் இருக்கின்றன. இங்குள்ள பா யீ வட்டம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தென்கிழக்கில் மிக முக்கியமான சந்தையாகும்.