இறுதியில் லாசா கொங்கா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளோம். சில நாட்களுக்கு முன், எஸ். செல்வமுடன் திபெத்தில் பயணம் செய்யலாம் என்று செய்தியை அறிந்த போது, நான் மிக மகிழ்ச்சி அடைந்ததுடன் ஓரளவு கவலையும் கொண்டிருந்தேன். சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்த பிரதேசம் உலகில் வானத்திற்கு மிக நெருங்கிய இடமாகும். வாழ்வில் ஒரு முறையேனும் அங்கே பயணம் செய்ய வேண்டும் என்பது மிகப் பலரின் கனவுதான். விரைவில் அங்கே பயணம் செய்யப் போகிறோம் என்று நான் முன்னதாக நினைக்கவில்லை. எனக்கும் செல்வத்திற்கும் பீடபூமியில் பயணம் செய்த அனுபவம் இல்லை. அங்கே பிரச்சினை ஏற்படுமோ என்று கவலைப்பட்டிருந்தேன்.
இருந்த போதிலும் அனைத்து கவலைகளையும் புறக்கணித்து, நாங்கள் துணிவாகப் புறப்பட்டோம். விமானத்திலிருந்து கீழே இருந்த அழகான மலைக் காட்சிகளைக் கண்ட போது, நாங்கள் இருவரும் முன்பு இருந்த கவலைகளை மறந்துவிட்டோம். இவ்வளவு அழகான காட்சிகளை கண்டுகளிக்கும் அனுபவம் அனைவருக்கும் கிடைக்காது. அல்லவா?
அதிக உற்சாகமோ கூடுதலான விளையாட்டோ கூடாது. மிகக் கடுமையான பீடபூமி தொடர்பான நோய் இன்னும் வரவில்லை என்று கூறப்பட்டது.
பரவாயில்லை, இந்த அழகான புனிதப் பிரதேசம் எங்களுக்காக காத்திருக்கின்றது. இதை நினைக்கும் போது, எந்த பிரச்சினையும் தெரியவில்லை.