• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லாசாவிலான 2வது நாள்
  2009-11-24 16:21:09  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் தன்னாட்சி பிரதேசம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு 12 இலட்சத்துக்கு அதிகமான சதுர கிலோமீட்டராகும். எல்லை நீளம் 4000 கிலோமீட்டருக்கு மேலாகும். மொத்த மக்கள் தொகை சுமார் 28 இலட்சத்து 70 ஆயிரமாகும். இதில் திபெத் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் தொகை 95 விழுக்காட்டுக்கு மேலாகும்.

பண்டைக் காலம் தொட்டு, கடுமையான இயற்கை சூழ்நிலைமையால் திபெத்தில் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் மிகவும் குறைவு. 1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், நடுவண் அரசின் ஒதுக்கீடு, இதர மாநிலங்கள் மற்றும் நகரங்களின் பல்வகை உதவியுடன் திபெத் விரைவாக வளர்ந்து வருகின்றது.

திபெத் தலைநகரான லாசாவில் சாலைகள் சுத்தமாக உள்ளன. சாலைகளின் இரண்டு பக்கங்களில் பல்வகை கடைகள் காணப்பட்டன.

நவீன வாழ்க்கையில் இன்பம் பெறும் திபெத் மக்கள் இன்னும் திபெத் வம்சாவழி புத்த மதத்தை மிகவும் நம்புகின்றனர். நேற்று கொங்கா விமான நிலையத்திலிருந்து லாசா நகருக்குச் செல்லும் வழியில், அழகான விவசாயத் தோட்டங்களைத் தவிர, நீண்ட கால வரலாறுடைய கோயில்கள், புத்தர் சிலைகள், மலைகளில் புனித சின்னங்கள் அதிகமாக காணப்பட்டன.

நேற்று இரவு 10 மணியளவில், லாசாவில் இருள் சூழ்ந்த்து. ஆனால், பெய்ஜிங் மாநகரில் 8 மணியளவில்தான் முற்றிலும் இருள் வரும். இரவில் 10 மணிக்குப் பிறகு தான், லாசாவில் போழுதுபோக்கு நடவக்கைகள் துவங்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இன்று பிற்பகல் எமது பயணக் குழு ஜோகாங் கோயிலில் சுற்றிப் பார்த்த்து. இந்தக் கோயில் 1350 ஆண்டுக் கால வரலாறுடையது. இங்கே உள்ள 12 வயது சாக்கியமுனியின் சிலை மிகவும் புகழ்பெற்றது.

இச் சிலை சாக்கியமுனி அவர்கள் உயிருடன் இருந்த போது உருவாக்கப்பட்டது. அவர்தான் இதனை புனிதப்படுத்தும் விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த சிலையைப் பார்த்தால் உண்மையான சாக்கியமுனியைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாக திபெத் மக்கள் கருதுகின்றனர். இந்தச் சிலை பண்டைய இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் தாங் வம்சத்தில் இளவரசி வென் செங், திபெத் து போ மன்னரை திருமணம் செய்ய திபெத்துக்கு வந்த போது இந்தச் சிலையை தன்னுடன் கொண்டு வந்தார். உலகில் 3 சாக்கியமுனி சிலைகள் மட்டும் உள்ளன.மற்றொரு 8 வயது சாக்கியமுனி சிலை Ramoche கோயிலில் வைக்கப்பட்டது.

ஆயிரம் புத்தர் சிலை இடம்பெறும் இடைவழி மூலம் ஒரு முழு சுற்று நடந்தால் தான், முழுமையான இன்பத்தை பெற முடியும். லாசாவில் சாக்கியமுனி சிலையை மையமாக கொண்டு 3 சுற்றுப் பாதைகள் உள்ளன.

பார்கோ தெருவின் இருபக்கங்களிலும் திபெத் பாணியிலான நினைவுப் பொருட்களை பயணிகள் வாங்கலாம். பயணிகளைத் தவிர, வழிபாடு செய்யும் திபெத் புத்த மத நம்பிக்கையுடைவர்கள் வழிபாட்டுச் சக்கரத்தை கையில் ஏந்தி சுற்றியவாறு வலம் வருகின்றனர். ஆகாயம் மிகவும் தெளிவாக இருக்கிறது. இங்குள்ள நிலைமையைக் கவனித்தால் மக்கள் மிகவும் அமைதியாகவும் இனிமையாகவும் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

குறுகிய 2 நாட்களில், செல்வம் இதர நேயர்களுடன் நண்பர்களாகிவிட்டார். படங்களைப் பார்க்கலாம்.

நாளை மிகவும் புகழ் பெற்ற போதல மாளிகையில் பயணம் செய்வோம். மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் ஏறிப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040