இத்தகைய கட்டிடத்தை நேரில் காண்பது அரிய வாய்ப்பாகும். நானும் செல்வமும் அதிர்ஷ்டமானவர்கள்தான்.
இம்மாளிகையின் உச்சியில் ஏறிய போது, உடல் மிகவும் களைத்துப் போனது. ஆனால், கண்களுக்கு உண்மையான விருந்தாக அமைந்தது. கட்டிடத்தில் படம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், நண்பர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து அங்குள்ள மதிப்புள்ள செல்வங்களை கண்டுகளித்திருக்கலாம்.
மாலையில் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வதற்காக, செல்வம் உணர்வுப்பூர்வமாக தகவல்களை சேகரிக்கின்றார்.
பிற்பகல் லாசா தேசிய இனத் துவக்கப் பள்ளிக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்தோம். குழந்தைகளின் புன்னகை உலகில் மிக அழகானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
அடுத்து, நாங்கள் திபெத் பாரம்பரிய மருந்து ஆலைக்குச் சென்றோம். அங்கே நானும் செல்வமும் இரு மருத்துவர்களாக மாறினோம். பாருங்கள்.