மார்ச் திங்கள் 28ம் நாள், திபெத் பண்மை அடிமைகள் விடுதலை நினைவு நாள் நிறுவப்பட்ட ஓராண்டு நிறைவாகும். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 150 பல்வேறு துறையினர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தி, இந்நிறைவு நாளைக் கொண்டாடினர்.
ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் மக்களின் மாபெரும் ஆதரவுகளோடு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் கணிசமான சாதனைகளைப் பெற்றுள்ளது. ஜனநாயகச் சீர்திருத்தம், பண்ணை அடிமைக் காலத்தை முடித்து, புதிய வளர்ச்சிக் கட்டத்தைக் கொண்டு வந்தது. திபெத்தின் லட்சக்கணக்கான பண்ணை அடிமைகளின் புதிய வரலாறு துவங்கியதை இச்சீர்திருத்தம் காட்டியது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.