தமிழ்ப் பிரிவு
2020-11-05 15:44:42

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் இலங்கைக்கு, 4 மணி நேர சிற்றலை நிகழ்ச்சி ஒலிபரப்ப்ப்படுகின்றன. மேலும், இணையத்தளம், வீட்டியோ, செல்லிட பேசி, சீனத் தமிழொலி எனும் இதழ் முதலிய பல்லூடக சேவைகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

இணையத்தளம்:https://tamil.cri.cn

2020ம் ஆண்டு கோடைக்காலம் சிற்றலை ஒலிபரப்பு:

இந்திய நேரம்,

இரவு  7︰30-8︰30

25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ்

22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ்

இரவு 8︰30-9︰30

30.96 மீட்டர்—9690 கி.ஹர்ட்ஸ்

25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ்

இந்திய நேரம்,

காலை  7︰30-8︰30

22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ்

19.66 மீட்டர்—15260 கி.ஹர்ட்ஸ்

காலை 8︰30-9︰30

22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ்

21.85 மீட்டர்—13730 கி.ஹர்ட்ஸ்

54 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், எங்கள் நேயர்கள், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, செளதி அரோபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ் நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும். ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை வரிசையில் முன்னணியில் உள்ளது.

தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, தமிழ்ப் பிரிவில் 14 சீனப் பணியாளர்களும் 3 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்