சீனாவின் ஷாங்காய் மாநகரத்தின் ஹுவாங்பூ ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஷாங்காய் கோபுரம், உலகின் 2ஆவது உயரமான கட்டிடமாகும். 132 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் உயரம் 632 மீட்டராகும். இதில், வணிகம், அலுவல், பொருட்காட்சி, விடுதி, உச்சநிலைத் தளச் சுற்றுலா பகுதி ஆகிய மண்டலங்கள் உள்ளன.