ஷாங்காய் புதோங் பிரதேச வளர்ச்சிக்கான புதிய இலக்கு
2020-11-15 16:39:46

கடந்த 30 ஆண்டுகளில், ஷாங்காய் மாநகரிலுள்ள புதோங் பிரதேசம் மொத்தமாக 10 ஆயிரத்து 295 கோடி அமெரிக்க டாலர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளது. இப்பிரதேசத்தில் 170 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 200 வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. உலகளவில் முன்னணியிலுள்ள 500 பெரிய தொழில் நிறுவனங்களில் 346 நிறுவனங்கள் புதோங்கிலுள்ள திட்டப்பணிகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் புதோங் பிரதேசம் பெற்றுள்ள சாதனைகள், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்புமுறையின் மேம்பாட்டைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதோங்கின் வளர்ச்சி மற்றும் திறப்பின் 30 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமைப்புமுறை சார்ந்த உயர்தரமான திறப்பை ஆழமாக்கி, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் போட்டியாற்றல் மேம்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது புதோங்கின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய கோரிக்கையாகும்.

தற்போது புதோங் பிரதேசத்தில் நாடு கடந்த நிறுவனங்களின் 350 பிராந்திய தலைமையகங்கள் அமைந்துள்ளன. சீனாவின் இரட்டை சுழற்சிச் திட்டத்துக்கு அவை ஒருங்கிணைந்த பங்கினை உறுதியாக ஆற்றும். அடுத்த 30 ஆண்டுகளில் புதோங் பிரதேசம் மேலதிக உயிராற்றலை வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.