“அரசியல் வைரஸை” பரவல் செய்து வருகின்ற அமெரிக்கா
2021-06-04 19:14:43

அமெரிக்க அரசியல்வாதிகள் கரோனா வைரஸ் தோற்றத்தை  சாக்குப்போக்காகக் கொண்டு, சீனாவின் மீது தொடந்து பழி தூற்றி வருகின்றனர். அமெரிக்காவின் மேலாதிக்கப்போக்கை இது வெளிப்படுத்துகிறது. உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பிலும் சர்வதேச ஒழுங்கிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

நடப்பு அமெரிக்க அரசு உலகச் சுகாதார அமைப்பில் மீண்டும் சேர்ந்து, பலதரப்புவாதம் என்ற கருத்தைப் பரவல் செய்த போதிலும், உலகச் சுகாதார அமைப்பு சீனாவில் மேற்கொண்ட ஆய்வின் முடிவை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் உண்மைகள் மற்றும் மனித உயிர்களின் மீது கவனம் செலுத்தவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும், அவர்கள் சீனாவின் மீது பழி தூற்றுவது, தற்போது உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான ஒத்துழைப்பைப் பாதித்துள்ளது. ஒரு மனத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது தான், வைரஸைத் தோற்கடிக்கும் வலிமைமிக்க வழிமுறையாகும்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்குச் சீனா என்னென்ன பங்காற்றியுள்ளது?இதுவரை, வைரஸால் பாதிக்கப்பட்ட வளரும் நாடுகளுக்கு 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உதவியளித்துள்ளதோடு, 150க்கும் மேலான நாடுகள் மற்றும் 13 சர்வதேச அமைப்புகளுக்கு தடுப்புப் பொருட்களை வழங்கியுள்ளது.

வைரஸ் பரவல் தடுப்புக்கான வளரும் நாடுகளின் தேவையைக் கை கட்டி வேடிக்கை பார்த்து வரும் அமெரிக்கா, உலகின் பல்வேறு நாடுகளுக்கு உதவியளித்து வருகின்ற சீனாவின் மீது பழி தூற்றி வருகிறது. இது சர்வதேச அறநெறி மற்றும் நீதிக்குப் புறம்பானது.

தற்போது, கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் போராட்டம் இன்னும் முடியவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் “அரசியல் வைரஸை”பரப்புவதை செய்ய உடனே நிறுத்தி, ஒத்துழைப்புப் பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.