© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த உறுப்பினர்களைப் பாராட்டி ஜுலை-1 எனும் பதக்கம் அளிக்கும் விழா, ஜுன் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் தலைசிறந்த உறுப்பினர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்.
ஷிச்சின்பிங் இவ்விழாவில் உரைநிகழ்த்துகையில்
கடந்த 100 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலை, தேசத்தின் செழிப்பு மற்றும் வலிமை, மக்களின் இன்பம் ஆகியவற்றுக்காகப் போராடி வருகின்றனர். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆரம்பக்கட்டக் குறிக்கோளில் உறுதியுடன் நிலைத்து நின்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர்கள், மக்களை முதலிடத்தில் வைத்து, தன்னலமின்றி பொது மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பக்கட்டக் குறிக்கோளை நினைவில் வைத்து, நவீனமயமான நாட்டைப் பன்முகங்களிலும் உருவாக்கும் புதிய பயணத்தில் 2ஆவது நூறாண்டுக்கால இலக்கையும் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியையும் நோக்கிச் செல்வதற்குப் போராட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை ஷிச்சின்பிங் ஊக்குவித்தார்.
ஜுலை-1 பதக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அளிக்கும் உச்ச நிலை கௌரவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 29 உறுப்பினர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.