ஹாங்காங் விவகாரத்தில் 5 கண்கள் கூட்டணியின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
2020-11-19 20:48:28

நாட்டுப்பற்று கொண்டவர்களும் ஹாங்காங்கை நேசிப்பவர்களும் ஹாங்காங்கை நிர்வகிக்க முடியும். சீனாவுக்கு எதிரானவர்களும் ஹாங்காங்கில் குழப்பமாக்குபவர்களும் வெளியேற்றப்படுவது இயல்புதான் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில நாடுகள் சர்வதேச சட்டம் மற்றும் உறவுக்கான அடிப்படை விதியை வெளிப்படையாக அத்துமீறி, சீனாவின் உள்விவகாரமான ஹாங்காங்கின் விவகாரத்தில் தலையிடுவதற்கு கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் சீனா தெரிவிக்கிறது. இந்த நாடுகள் 5 அல்லது 10 கண்களைக் கொண்டிருந்தாலும், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனைப் பாதிக்கும் பட்சத்தில், தக்க பதிலடி நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.