இலங்கை வளர்ச்சிக்குத் துணைபுரியும் கொழும்பு துறைமுக நகரம்
2020-11-19 20:18:32

இந்து மாகடலில் நிதி மையமாகவும் வணிக மையமாகவும் மாற விரும்பும் இலங்கையின் வளர்ச்சி இலக்கிற்கு கொழும்பு துறைமுக நகரம் துணைபுரியும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் சலுகை கொள்கையை வழங்குவதில் இலங்கை அரசின் ஆக்கப்பூர்வ கருத்துக்களை சீனா பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

இலங்கை தரப்புடன் சீனத் தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆதரவளிப்பதன் மூலம், இத்திட்டப்பணியின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.