ஈரான் மீது அமெரிக்கா புதிய சுற்றுத் தடை நடவடிக்கை
2020-11-19 16:27:53

ஈரானின் அதிகாரிகள் மற்றும் பல நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மேலதிக தடை நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அரசு 18ஆம் நாள் அறிவித்துள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது அலாவி மற்றும் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் 2 உயர் நிலை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சுற்றுத் தடைப்பட்டியலில் ஒரு அறக்கொடை நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள், எரியாற்றல், தாதுப் பொருள், நாணயத் துறை சார்ந்த 50 நிறுவனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.